கிராமத்துக் கதை




கிராமத்துக் கதை




தொலைந்துபோன எமது கிராமங்களுக்குச் சமர்ப்பணம்


Song : Pandengadoru Naadundarnne...
Drama : Pakida [ 2018 ]
Lyrics : Muhad Vembayam
Music : Sebi Nayarambalam
Singer : Resmi Sateesh 
நன்றி: PG Saravanan & Aswad Shariati 

அன்றங்கே ஒரு நாடிருந்ததே 
அந் நாட்டில் ஆறிருந்ததே 
ஆறு நிறைய மீனிருந்ததே 
மீன் முழுகிடக் குளிரிருந்ததே 

அன்றங்கொரு வயலிருந்ததே 
வயல் முழுவதும் கதிரிருந்ததே 
கதிர் கொத்திடக் கிளி வந்ததே 
கிளிகள் பாடும் பாட்டிருந்ததே 

அந்நாட்டில் வெயிலிருந்ததே 
மண்வழியில் மரமிருந்ததே 
மரத்தடியில் பேசிச் சிரித்திட 
நண்பர்கூட்டம் நூறிருந்ததே 

நல்ல மழை பெய்திருந்ததே 
நரகதீ சூடில்லையே 
தீவட்டிக் கொள்ளையில்லயே 
தின்றதெதுவும் நஞ்சில்லையே 

ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் 
மறு வீட்டில் பசியில்லையே 
ஒருகண் கலங்கி நிறைந்தால் 
ஓடிவரப் பலருண்டங்கே 

நாடெங்கும் மதில்கள் இல்லையே 
நடைவெளி இடைவெளி நூறிருந்ததே 
நாலுமணிப் பூ இருந்ததே 
நல்லோர் சொல்லுக்கு விலையிருந்ததே 

அன்றும் பல மதம் இருந்ததே 
அதையும் தாண்டி அன்பிருந்ததே 
உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன் 
என்றதொரு சண்டை இல்லையே 

அந் நாட்டைக் கண்டவருண்டோ 
எங்கே போனது தெளிவுண்டோ 
அந்நாடு இறந்தே போனதோ 
அது வெறும் ஒரு கனவானதோ

Comments